ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. நகைபிரியர்கள் அதிர்ச்சி..!
சென்னை,தங்கம் விலைதங்கம் விலை கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பின்னர் படிப்படியாக குறைந்தது. கடந்த 4-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்ற-இறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது. இதற்கிடையே, கடந்த 10-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. 10, 11-ந்தேதிகளில் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இன்றைய தங்கம் விலை இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று 2-வது முறையாக பிற்பகலில் மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.95,200க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து 11,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைபிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெள்ளி விலை காலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 13.11.2025 ஒரு சவரன் ரூ.95,200, ; சவரனுக்கு ரூ. 800 உயர்வு (இன்று பிற்பகல்) 13.11.2025 ஒரு சவரன் ரூ.94,400 ; சவரனுக்கு ரூ.1,200 உயர்வு (இன்று காலை) 12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 (நேற்று) 11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600 10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840 09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160 விலை உயர என்ன காரணம்..? தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியிருந்தது. தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருப்பதால் அதன் விலை உயர ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
