ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த 4-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்ற-இறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது. கடந்த 10-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. 10, 11-ந்தேதிகளில் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்தை மீண்டும் தாண்டியிருந்த நிலையில், நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையில் நேற்று ஏற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை இந்நிலையில் இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 13.11.2025 ஒரு சவரன் ரூ.94,400 (இன்று) 12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 (நேற்று) 11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600 10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840 09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160 விலை உயர என்ன காரணம்..? தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியிருந்தது. தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருப்பதால் அதன் விலை உயர ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மூலக்கதை