இலங்கை மனைவியை கொல்ல முயன்ற வெளிநாட்டு கணவன்: பொலிஸாருக்கு கிடைத்த சிசிடிவி - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை மனைவியை கொல்ல முயன்ற வெளிநாட்டு கணவன்: பொலிஸாருக்கு கிடைத்த சிசிடிவி  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் மனைவியை கொலை செய்ய ஐரோப்பிய வாழ் கணவன் முயற்சித்தது வெளிவந்துள்ளது.மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் தனது இலங்கை மனைவியை கார் ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில், இத்தாலிய நாட்டவர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மனைவி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார், மனைவி மீது காரை ஏற்றி கணவன் கொல்ல முயன்றது தெரிய வந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தம்பதி திக்வெல்ல பகுதியில் ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலானது இலங்கை மனைவிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை பெண் சுற்றுலாவுக்காக வெளிநாடு சென்ற போது, அங்கு அறிமுகமான நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தம்பதியினர் இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்து வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலிய நாட்டவரும் அவரது ஓட்டுநரும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை