முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் புழுக்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் செவ்வாய்க்கிழமையன்று வாங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உணவகம் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதிய சாப்பாட்டிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார். சாப்பிடுவதற்காக பார்சலை திறந்த போது, மீன் பொரியல் உணவிற்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கினார். புகாரின் போரில் உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாக கண்டறிந்துள்ளனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகம் மீது சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், உணவின் தரத்தை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
