இலங்கையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் அவுடங்காவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த துயரமான உயிரிழப்பு சம்பவம் நேற்று(08/11/2025) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி - தலுகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீராடிய போது இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சிறுவனின் உடல் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிகிரியா பொலிஸார் கூடுதல் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை