யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய 3 இளைஞர்கள் கைது - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய 3 இளைஞர்கள் கைது  லங்காசிறி நியூஸ்

இலங்கை யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று(07.11.2025) யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த போது கையும் களவுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தேவையான மருத்துவ ஊசி உட்பட சிலவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும், அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களும் உள்ளடங்குவர்.மேலதிக விசாரணைகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மூலக்கதை