ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்திற்கு கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். இந்த நிலையில் விவேக் ராமசாமிக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒஹியோ மாகாணம் எனக்கு மிகவும் பிரியமான இடம். அங்கு நான் 2016, 2020, 2024 தேர்தல்களில் மூன்று முறை வெற்றி பெற்றேன். அங்கு கவர்னராக போட்டியிடும் விவேக் ராமசாமி, இளமையானவரும், வலிமையானவரும் ஆவார். அவர் மிகுந்த புத்திசாலி, நாட்டை உண்மையாக நேசிப்பவர். நானும் அவருடன் போட்டியிட்டிருக்கிறேன், அவரை நன்கு அறிவேன். அவர் ஒரு சிறந்த மனிதர்” என்று தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் ஆதரவுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார். தற்போது 40 வயதாகும் விவேக் ராமசாமி, தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் ஆவார். கடந்த ஆண்டு குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், அவர் டிரம்பை ஆதரித்து அவரது நம்பிக்கைக்குரியவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
