பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி அநுரகுமார அதிரடி - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி அநுரகுமார அதிரடி  லங்காசிறி நியூஸ்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் மாணவர் கொடுப்பனவு ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5000 வழங்கிட ரூ 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டங்களானது குழந்தைகள் பொது கல்வியில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை