இப்படி ஏமாறுவேன்னு எதிர்பார்க்கவே இல்லை...டைரக்டர் மேல வழக்கு போடணும்னு நினைத்தேன் - பிரபல நடிகை

  தினத்தந்தி
இப்படி ஏமாறுவேன்னு எதிர்பார்க்கவே இல்லை...டைரக்டர் மேல வழக்கு போடணும்னு நினைத்தேன்  பிரபல நடிகை

சென்னை,நடிப்பை விட்டு விலகி நீண்ட காலமாக தொகுப்பாளினியாக வலம் வரும் சுமா, இப்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார். இறுதியாக 2022-ம் ஆண்டு ஜெயம்மா பஞ்சாயத்து படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, இப்போது பிரேமண்டே படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.பிரியதர்ஷி மற்றும் ஆனந்தி நடிக்கும் இந்தப் படத்தில் சுமா ஒரு கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற சுமா, வேடிக்கையாகப் பேசினார். அவர் பேசுகையில், ’இந்தப் படத்தில், கதாநாயகி வேடம் முதலில் எனக்குதான் வந்தது. ஆனால் பிரியதர்ஷி என்னை விட இளையவர் என்பதால், இயக்குனர் நவ்நீத் அதனை மறுத்துவிட்டார். பின்னர் அவர் உங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த கான்ஸ்டபிள் வேடம் இருப்பதாக கூறினார். படத்தில் நடித்த பிற்குதான் தெரிந்தது, சக்திவாய்ந்த கான்ஸ்டபிள் அல்ல...சக்தியற்ற கான்ஸ்டபிள் என்று. இப்படி ஏமாறுவேன்னு எதிர்பார்க்கவில்லை. டைரக்டர் மேல வழக்கு போடணும்னு நினைச்சேன். ஆனா பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு தெரிந்ததும் அப்படியே விட்டுட்டேன். அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதைவிட பெரிய வழக்கு வேற என்ன இருக்க முடியும்? ’ என்றார்.A post shared by Suma Kanakala (@kanakalasuma)

மூலக்கதை