'பாகுபலி' இல்லையென்றால் அந்த படங்களை எடுத்திருக்க மாட்டேன்’ - மணிரத்னம்

  தினத்தந்தி
பாகுபலி இல்லையென்றால் அந்த படங்களை எடுத்திருக்க மாட்டேன்’  மணிரத்னம்

சென்னை,பத்து வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான 'பாகுபலி: தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது இரண்டு பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு பார்வையாளர்களிடம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரபல இயக்குனர் மணிரத்னம் 'பாகுபலி' இல்லையென்றால் 'பொன்னியின் செல்வன்' படங்களை எடுத்திருக்க மாட்டேன் என்று கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் பேசுகையில், "பாகுபலி' இல்லையென்றால், 'பொன்னியின செல்வன் என்ற படம் இருந்திருக்காது. ராஜமவுலி அந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்காமல் இருத்திருந்தால், இந்தப் படத்தை நான் எடுத்திருக்க மாட்டேன். நான் ராஜமவுலியைச் சந்தித்தபோது அதை அவரிடமே சொன்னேன் "என்றார். இது பழைய வீடியோ என்றாலும், இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

மூலக்கதை