'தி கேர்ள் பிரண்ட்' படத்தில் ராஷ்மிகாவை பார்க்க முடியாது, ஆனால்... - நடிகர் தீக்சித் ஷெட்டி

  தினத்தந்தி
தி கேர்ள் பிரண்ட் படத்தில் ராஷ்மிகாவை பார்க்க முடியாது, ஆனால்...  நடிகர் தீக்சித் ஷெட்டி

சென்னை,ராஷ்மிகா மந்தான தற்போது நடித்திருக்கும் படம் 'தி கேர்ள் பிரண்ட்'. தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நடிகர் தீட்சித் ஷெட்டி ஒரு நேர்காணலில் பேசுகையில், ’இந்தப் படம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல குடும்ப பார்வையாளர்களுக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த கதாநாயகியும் நியாயம் செய்திருக்க முடியாது என்று உணர்ந்தேன். படம் முழுவதும் ராஷ்மிகாவை பார்க்க முடியாது. அவர் நடித்த பூமாவின் வேடம் மட்டுமே தெரியும்’ என்றார்.

மூலக்கதை