அமெரிக்காவில் ஆங்கில தேர்வில் தோல்வி; 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணிநீக்கம்
வாஷிங்டன், அமெரிக்காவில், இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு லாரி டிரைவர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7,000-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார்.பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரி தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் டிரைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
