பிரதீப் ரங்கநாதனின் “லவ் டுடே” படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு

  தினத்தந்தி
பிரதீப் ரங்கநாதனின் “லவ் டுடே” படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த ‘லவ் டுடே’ படம் 2022 நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்தது. இப்படம் இந்தியில் ‘லவ்யப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஏஜிஎஸ் படக்குழு ‘லவ் டுடே’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு சிறப்பித்துள்ளது. Can’t believe it’s been a 3 Year long drive with Mamakutty ♥️#3YearsOfLoveToday https://t.co/Wzio0VKdVe #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@pradeeponelife @thisisysr @i__ivana @archanakalpathi @aishkalpathi @RedGiantMovies_ @SonyMusicSouth pic.twitter.com/UyCUOzCsj9

மூலக்கதை