அன்பை கொண்டாடும் அனைவருக்குமான வெற்றி - மாரி செல்வராஜ்

  தினத்தந்தி
அன்பை கொண்டாடும் அனைவருக்குமான வெற்றி  மாரி செல்வராஜ்

சென்னை,பைசன் படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் அருமையான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், பைசன் படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டரை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அதில் அன்பை கொண்டாடும் அனைவருக்குமான வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.A win for every soul that chooses love!! ✨#BisonKaalamaadan #Blockbuster Raid in the Theatres Near You! @applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi #AmeerSultan @Ezhil_DOP… pic.twitter.com/HrVC2frh39

மூலக்கதை