துல்கர் சல்மானின் “காந்தா” டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  தினத்தந்தி
துல்கர் சல்மானின் “காந்தா” டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக இருந்தது. ஆனால், அப்போது துலகர் சல்மான் தயாரித்த லோகா திரைப்படம் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருந்ததால் காந்தா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.டிரெய்லர் வரும் 6ம் தேதி வெளியாகிறது. ‘காந்தா’ படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது.THE FIRST SPARK (Telugu) - OUT NOW!TRAILER ON NOV 6th!⚡️https://t.co/7EB8FFAbrMA @SpiritMediaIN and @DQsWayfarerFilmproduction#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia#DQsWayfarerfilms #Bhagyashriborse#SelvamaniSelvaraj #Kaanthafilm#KaanthaFromNov14…

மூலக்கதை