ஐ.பி.எல்.: ரூ. 23 கோடிக்கு தக்க வைத்த வீரரை விடுவிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்..?

  தினத்தந்தி
ஐ.பி.எல்.: ரூ. 23 கோடிக்கு தக்க வைத்த வீரரை விடுவிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்..?

ஐதராபாத், ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் சில தினங்களில் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்கள் மற்றும் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது. இதனிடையே டிரேடிங் முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மினி ஏலத்திற்கு முன் தங்களது அணியிலிருந்து அதிரடி வீரரான ஹென்ரிச் கிளாசெனை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் ரூ.23 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தக்க வைக்கப்பட்ட அவரை விடுவித்து மினி ஏலத்தில் அதைவிட குறைந்த தொகைக்கு வாங்க ஐதராபாத் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிளாசென் ஐதராபாத் அணிக்காக 2023 - 2025 வரை 3 சீசன்களில் விளையாடி உள்ளார். இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை