உலக கோப்பையை கைப்பற்றியாச்சு; இனி லெவலே வேற... வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
புதுடெல்லி, 8 அணிகள் பங்கேற்ற 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி தொடங்கி நடந்தது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி பாராட்டுகளை பெற்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இறுதி போட்டியில், தென்ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு பின்னர், வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி வெளிவந்து உள்ள தகவலில், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா ஆகியோரின் சமூக ஊடக கணக்குகளை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுதவிர, அவர்களின் பிராண்ட் மதிப்பும் கூடியுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில், 127 (நாட் அவுட்) ரன்களை குவித்த ஜெமிமாவின் விளம்பர மதிப்பு 100 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதுபற்றி ஜெமிமாவுக்கான விளம்பரங்களை நிர்வகிக்க கூடிய ஏஜென்சியை சேர்ந்த தலைமை வர்த்தக அதிகாரியான கரண் யாதவ் கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்ததுமே உடனடியாக எங்களுக்கு கோரிக்கைகள் வந்து குவிந்து விட்டன. 10 முதல் 12 பிரிவுகளை சேர்ந்த விளம்பர நிறுவனங்களுடன் நாங்கள் பேசி வருகிறோம் என்றார். இதனால், விளம்பர வருவாயை ரூ.75 லட்சம் என்பதில் இருந்து ரூ.1.5 கோடி என்ற அளவுக்கு ஜெமிமா உயர்த்தி விட்டார். இது அந்நிறுவனத்துடனான நீண்டகால தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப மாறுபடும். நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா (வயது 25) ஏற்கனவே 16 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக உள்ளார். அவற்றில் நைக், ஹுண்டாய், எஸ்.பி.ஐ. உள்ளிட்டவையும் அடங்கும். இதன் மூலம் அவர் ஒரு நிறுவனத்திடம் இருந்து வருவாயாக ரூ.1.5 முதல் 2 கோடி வரை பெறுகிறார். இனி இவர்களை கையில் பிடிக்க முடியாது என்ற அளவுக்கு உலக கோப்பை வெற்றி அவர்களை உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
