அணு ஆயுத சோதனை விவகாரம்; டிரம்ப் கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம்
நியூயார்க், அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார். இதற்கிடையில் டிரம்ப் கூறும்போது, ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்தார்.“இதுகுறித்து அவர்கள் பேச மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன,” என்றார் டிரம்ப். இந்த நிலையில், டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:“பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. தற்போதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் நாடாக பாகிஸ்தான் இருக்காது. நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க மாட்டோம்,” என்றார். அதேபோல், அணு ஆயுத சோதனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. “சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது,” என்று சீனா தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
