சத்தீஷ்காரில் ரெயில் விபத்து: 2 பேர் பலி; பலர் காயம்

  தினத்தந்தி
சத்தீஷ்காரில் ரெயில் விபத்து: 2 பேர் பலி; பலர் காயம்

பிலாஸ்பூர், சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது மாலை 4 மணியளவில் மெமு ரெயில் ஒன்று அந்த வழியே வந்தது. அந்த ரெயில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த ரெயில் விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். விபத்தில் மெமு ரெயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு காணப்பட்டன. பயணிகள் காயத்தில் அலறியபடி காணப்பட்டனர். இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை