வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி பேரணி
கொல்கத்தா,இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் ’வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் கமிஷனின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.தமிழ்நாட்டில் திமுக இவ்விவகாரம் தொடர்பாக ’அனைத்துக் கட்சி கூட்டத்தை’ கூட்டியது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுபோல, மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.மேற்கு வங்காள அமைச்சர்கள், திரிணமூல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர். அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அபிஷேக் பானர்ஜி பேசுகையில், “இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பாஜக கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்,” என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
