டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு

  தினத்தந்தி
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு

புதுடெல்லி, கடந்த வாரம், டெல்லி அரசு செயற்கை மழை பொழியச் செய்து மாசைக் குறைக்கும் திட்டத்தை முயன்றது. ஆனால் வானிலையில் போதிய ஈரப்பதம் இல்லாத காரணத்தால் இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனால் டெல்லியில் மாசு அடர்த்தி தொடர்ந்தும் அதிகரித்தே வருகிறது. டெல்லியின் காற்று மாசுபாட்டின் மூல காரணங்களில், வாகன புகை, தொழிற்சாலைகள், மருந்து கழிவு எரிப்பு மற்றும் அண்டை மாநிலங்களில் நெற்பயிர் கொளுத்தல் போன்றவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக் காலத்திற்குப் பிறகு இந்த பிரச்சினை அங்கு தீவிரமடைந்து வருகிறது. மருத்துவர்கள் ஏற்கனவே இது சுவாசநாளப் பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்து உள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தற்காலிகமாக மாறியுள்ளன. டெல்லியில் தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது. காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும். டெல்லியில் உள்ள நொய்டா, காஜியாபாத்தில் 329-கவும், அலிப்பூரில் 421-கவும், வஜீர்பூர் மற்றும் ஜகாங்கிர்புரியில் 404-கவும், உள்ளது. காற்றின் தரம் மோசமாக உள்ளதால் தொடர்ந்து மூடுபனி நிலவி வருகிறது. நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியாக உயர்ந்தது. பருவ கால வெப்பநிலை சராசரியை விட 1.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக டெல்லி மாசுகட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை