விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நேற்று மாலை மராட்டிய மாநிலம் மும்பைக்கு ஆகாசா விமானம் புறப்பட இருந்தது. விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து இருந்தனர். ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணி இருக்கை அருகே இருந்த அவசரகால கதவை திறந்தார். இதுகுறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுதளத்துக்கு மீண்டும் கொண்டு வந்தார். மேலும், இது குறித்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பயணி ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜித் சிங் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தவறுதலாக அவசர கால கதவை திறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து 1 மணிநேர தாமதத்துக்கு பிறகு விமானம் மும்பை புறப்பட்டது. விமானத்தின் அவசர கால கதவை பயணி திறக்க முயன்ற சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
