ஐ.டி. நிறுவனங்களில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் அசுரத்தனமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அது மிகவும் பிரபலமானதாக மாறிவிட்டது. சாதாரண கணக்குகள், புதிர்களை தீர்ப்பதில் இருந்து பெருநிறுவனங்களை தொடங்கி நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்துக்குமான யுக்திகளை தர வல்லதாக ஏ.ஐ. உருமாறிவிட்டது. இதனால் வணிகம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏ.ஐ. வளர்ச்சியடைந்துவிட்டது. செலவுகளைக் குறைத்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றை ஏ.ஐ.யே கவனித்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்தநிலையில் ஏ.ஐ.யை காரணம் காட்டி பெருநிறுவனங்கள் முதல் புத்தாக்க நிறுவனங்கள் வரை ஆட்குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு இதுவரையில் உலகம் முழுவதும் ஏ.ஐ.யை காரணம் காட்டி 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து முன்னணி வணிக இணையத்தளமான ‘லே-ஆப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் உள்ள 218 நிறுவனங்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 732 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்கள் 30 ஆயிரம் பேரை இதுவரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
