இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி
காத்மண்டு,இந்தியா - நேபாளம் எல்லையில் இமயமலை உள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். அதேவேளை, 4 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்த 7 பேரில் 3 பேர் அமெரிக்காவையும், ஒருவர் இத்தாலியையும், ஒருவர் கனடாவையும், இருவர் நேபாளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
