பெரு நாட்டில் ‘ஸ்பைடர்மேன்’ வேடத்தில் சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ் அதிகாரி
லிமா, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், ‘ஹாலோவீன்’ சீசன் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் லிமாவில் உள்ள சாண்டியாகோ டி சர்கோ(Santiago De Surco) என்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றவாளிகளை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக, போலீஸ் அதிகாரி ஒருவர் ‘ஸ்பைடர்மேன்’ வேடத்துடன் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார். ‘ஹாலோவீன்’ சமயத்தில் அங்கு இதுபோல் மாறுவேடங்கள் அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், போலீசார் நடத்திய இந்த நூதன தேடுதல் வேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ‘கொக்கைன்’ (Cocaine) போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
