மெக்சிகோ: சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - 23 பேர் உயிரிழப்பு

  தினத்தந்தி
மெக்சிகோ: சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து  23 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, வடமேற்கு மெக்சிகோவில் ஹெர்மோசிலோ நகர மையத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எதிர்பாராத விதமாக நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்10-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் நச்சு வாயுக்களை சுவாசித்ததால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை