கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்

  தினத்தந்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்

செயின்ட் லூயிஸ், கிளட்ச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி நாள் நடந்த 4 போட்டியிலும் கார்ல்சன் வெற்றி பெற்று 25.5 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். பேபியானோ கரவுனா 16.5 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தையும், ஹிகாரு நகமுரா 14 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும் பிடித்தனர். முதல் நாளில் முதலிடத்தில் இருந்த குகேஷ் 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்பட்டது. குகேஷுக்கு ரூ.62 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

மூலக்கதை