காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் இசக்கிபாண்டியன். வழக்கறிஞரான இவர், சில தினங்களுக்கு முன்பு தனது காதலியை கோவையில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் காதல் ஜோடிகள் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையில், இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய கோவை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி கிடைக்காத நிலையில், சொந்த ஊரான பாளையங்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக இருவரும் வந்திருந்தனர். அப்போது இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, போலிசார் பெண் மற்றும் மாப்பிளை வீட்டைச் சேர்ந்த இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தால் பாளையங்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
