கொழும்பில் மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்: சிறைச்சாலை ஆணையர் வேண்டுகோள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பயிலும் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 230,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அக்குரெஸ்ஸவில் உள்ள கோடபிட்டிய தேசிய பள்ளியில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆணையர் இந்த தகவலை சுட்டிக்காட்டினார். மேலும் தெற்கு மாகாணம் போதைப்பொருள் பழக்கத்தில் பெரிய நிலைக்கு தள்ளப்படும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்கு பகுதி மாகாணம் ஆனது நிழல் உலக நடவடிக்கையில் முதலிடத்தில் இருப்பதாகவும், இலங்கை சிறையில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் இளைஞர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க, அதிகாரிகளை சிவில் உடையில் நியமித்து இருப்பதாகவும், நீங்கள் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும், நீங்கள் எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு சுற்றித் திரிகிறீர்கள் என்பதை கவனித்து உங்களுக்கு தகவல் எதுவும் கிடைத்தால் உடனே தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் போதைப்பொருளுடன் யாரேனும் இருந்தால் எனது தொலைபேசி எண் 071 859 2683" என்பதை தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
