ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?

  தினத்தந்தி
ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?

சர்வதேச அரசியல் சூழ்நிலையால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 60 ஆயிரமாக இருந்த தங்கம் விலை கடந்த 17ம் தேதி ரூ. 97 ஆயித்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. இதனை தொடர்ந்து தங்கத்தின் விலை மெல்ல குறைந்து வருகிறது. இதனிடையே, சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 2 ஆயிரத்து 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 93 ஆயிரத்து 600க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 300 குறைந்து ரூ. 11 ஆயிரத்து 700க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரேநாளில் 2வது முறையாக தங்கம் விலை மாலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று மாலை ஒரு சவரன் தங்கம் ரூ. 1 ஆயிரத்து 280 குறைந்து ரூ. 92 ஆயிரத்து 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 160 குறைந்து ரூ. 11 ஆயிரத்து 540க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3 ஆயிரத்து 680 குறைந்துள்ளது. அதேபோல், தங்கம் கிராமிற்கு ரூ. 460 குறைந்துள்ளது.

மூலக்கதை