இலங்கையில் சிவப்பு வானிலை எச்சரிக்கை: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை நிலவரம் காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இந்த வானிலை எச்சரிக்கையில், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கும். இந்த வானிலை எச்சரிக்கை இன்று காலை 9 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வானிலை அமைப்பு தொடர்ந்து வலுவடைந்து இலங்கைக்கு அருகில் வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில முக்கிய பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கு மேல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வானிலை அறிக்கை மீது தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
