இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.2,080 உயர்வு
சென்னை,தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது. கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அதன் பின்னரும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்திலேயே பயணித்தது. அந்த வகையில் கடந்த 17-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற உச்சத்தை தொட்டது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த சூழலில், எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதேபோல் கடந்த 18-ந்தேதி அதிரடியாக தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி. கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 920-க்கும், ஒரு பவுன் ரூ.95 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலை சரிந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையுமா என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு இன்று அதிர்ச்சியே காத்திருந்தது. தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.260 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,180- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் விலை ரூ.97,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனையான நிலையில், இன்று ரூ.188 ஆக விற்பனையாகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
