4-வது நாளாக உச்சம் கண்ட இந்திய பங்கு சந்தைகள்; சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு
மும்பை, இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்று உச்சமடைந்து காணப்பட்டன. இதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து (0.49 சதவீதம்) 84,363.37 புள்ளிகளாக இருந்தது. இன்றைய நாளில் அது 704.37 புள்ளிகள் வரை உச்சமடைந்து 84,656.56 புள்ளிகளாகவும் இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 133.30 புள்ளிகள் (0.525 சதவீதம்) உயர்ந்து 25,843.15 புள்ளிகளாக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கு இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்து உள்ளது. சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.52 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதேபோன்று பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் வங்கி, இந்திய பாரத வங்கி, டாடா கன்சல்டன்சி, டைட்டன் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவையும் லாபத்துடன் காணப்பட்டன. ஆசிய பங்கு சந்தைகளிலும் நேர்மறையான போக்கு காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலும் பங்கு சந்தைகள் லாபத்துடன் காணப்பட்டன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
