102 வீதத்தை எட்டியுள்ள இலங்கை உள்நாட்டு வருமான இலக்கு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
102 வீதத்தை எட்டியுள்ள இலங்கை உள்நாட்டு வருமான இலக்கு  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் உள்நாட்டு வருமான இலக்கு 102 சதவீதத்தை எட்டியுள்ளது. இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாங்கள் எதிர்பார்த்த வரி வருமானத்தில் 102 சதவீதம் அதிகமாக வசூலித்து இருப்பதாக நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட ரூ.1.61 டிரில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.1.64 டிரில்லியன் வருமானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் வருமான செயல்திறன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரி நிர்வாகத்தில் உள்ள சவால்களையும் மதிப்பாய்வு செய்துள்ளனர்.அத்துடன் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் சில சீர்திருத்த முன்மொழிவுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மூலக்கதை