வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இலங்கை வெளிநாட்டு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பல் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு பணியகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என்று மோசடியில் ஈடுபடும் தனிநபர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால் தங்களுடைய சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது. யாரேனும் இது தொடர்பான தகவல் வைத்து இருந்தால் 0112 882228 என்ற தொலைபேசி எண் மூலம் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக புகார்கள் அதிக அளவில் வரத் தொடங்கி இருப்பதாகவும், அதில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கடந்த இரண்டு நாடுகளில், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், கிரிபத்கொடையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் துபாயில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ரூ.800,000 பெற்ற ஒரு பெண்ணும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் என குருநாகலில் ஹோட்டல் ஒன்றில் நேர்காணல் நடத்திய நபர் ஒருவரும் அடங்குவர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
