ருக்மணி வசந்த்தின் நடிப்பை விமர்சித்த தயாரிப்பாளர்- ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
ஐதராபாத், கன்னட திரை உலகில் அறிமுகமாகி "மதராஸி, ஏஸ்" போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ருக்மணி வசந்த். ரிஷப் ஷெட்டி நடிப்பில் நேற்று வெளியான காந்தாரா சாப்டர்-1 படத்திலும் நடித்துள்ளார். படத்தின் புரொமோஷன் விழா ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ரவிஷங்கர், ருக்மணி வசந்த் நடிப்பதை நான் அருகில் இருந்து பார்த்து உள்ளேன். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாக இருக்கும் எங்களது புதிய படத்திலும் ருக்மணி வசந்த் நடிக்கிறார். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். திறமைக்கு இணையான அல்லது குறைந்த பட்சம் அவருக்கு அருகில் வரக்கூடிய ஒரு கதாநாயகியை தேடினோம். ருக்மணியிடம் மட்டும் அதை கண்டுபிடிக்க முடிந்தது. ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ருக்மணி வசந்த் 80 சதவீதத்தையாவது கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என பேசினார். அவரது கருத்துக்கள் வைரலாக பரவியதுடன் எதிர்ப்புகளும் அவரை நோக்கி பறந்து வந்த வண்ணம் உள்ளன. உங்கள் ஹீரோவை விளம்பரப்படுத்த ருக்மணியை அவமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பது உள்பட பல்வேறு கண்டன கருத்துக்களை பதிவிட்டு தயாரிப்பாளருக்கு எதிராக டிரோல் செய்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
