ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் தொடர்ந்து அதிகரிப்பு
புதுடெல்லி,இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் அளவு செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் 10.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. Reliance Industries மற்றும் Nayara Energy ஆகியவை பிரதான டீசல் ஏற்றுமதி நிறுவனங்களாக உள்ளன.இந்தியாவில் இருந்து டீசலை வாங்க ஐரோப்பிய நாடுகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே, ஏற்றுமதி இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களிலும் அதிக அளவில் நீடிக்க வாய்ப்புள்ளது. இதைபோல ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் (எப்டா) உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு இந்தியா செய்து கொண்டது.இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான முதலீடு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் இதில் மேலும் 150 பில்லியன் டாலரை கூடுதலாக அதாவது மொத்தம் 250 பில்லியன் டாலர் (சுமார் ரூ.22 லட்சம் கோடி) அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை எதிர்பார்ப்பதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளார். இந்த 4 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
