அரசு பணியாளர் தேர்வில் காப்பி அடித்த வாலிபருக்கு உதவிய நண்பர் கைது
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெரளசேரி பகுதியை சேர்ந்தவர் முகமது சகத் (வயது 27). இவர் கடந்த 27-ந் தேதி கேரள அரசு பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வை பையாரம்பலம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் எழுதினார். அப்போது அவர் தனது சட்டையில் கேமரா பொருத்தி, அதன் மூலம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளை படம் பிடித்து உள்ளார். அதோடு தேர்வு மையத்தின் வெளியே நண்பரை நிற்க வைத்து, அவருக்கு கேமரா மூலம் கேள்விகளை காண்பித்து, அதற்கான விடையை ஹெட்போன் மூலம் கேட்டு தேர்வு எழுதியது தெரியவந்தது. இதுதொடர்பாக கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பணியாளர் தேர்வில் காப்பி அடித்த முகமது சகத்தை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவான நண்பரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில் அவர் பெரலசேரி அருகே உள்ள முண்டல்லூர் பகுதியை சேர்ந்த சபீல் (24) என்பதும், முகமது சகத் தேர்வில் காப்பி அடிக்க தேர்வு மையத்துக்கு வெளியே நின்று வினாக்களுக்கு உரிய உடையை தெரிவித்து உதவியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
