குறைவான படங்கள் நடித்தாலும்.. நிறைவாக நடித்து ரசிகர்களை கவரவேண்டும்- ஷ்ரத்தா ஸ்ரீநாத்
முன்னணி நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப் உடன் இணைந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்த ‘தி கேம்' என்ற வெப் தொடர், ஓ.டி.டி.யில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இதுகுறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, ‘கேம் டெவலப்பர்' தம்பதியைச் சமூக வலைதளங்களின் தாக்கம் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது? அவர்களை சுற்றியிருப்போரை எப்படியெல்லாம் பாதிக்கிறது? என்பது கதை. 7 எபிசோட்கள் கொண்ட இத்தொடரில் மிகுந்த உழைப்பை ஒட்டுமொத்த படக்குழுவும் கொட்டியிருக்கிறோம். என்னை பொறுத்தவரை பொறுப்பான இல்லத்தரசி கதாபாத்திரங்களிலேயே ரசிகர்கள் என்னை ரசிக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, அந்தவகை கதாபாத்திரங்களே என்னை தேடி வருகின்றன. எனக்கும் காதல், ரொமான்ஸ் படங்களில் நடிக்க ஆசை தான். இன்னும் சொல்லப்போனால் ரகசிய உளவாளி போன்ற கதாபாத்திரங்களில், திரில்லர்-ஆக்ஷன் படங்களில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறேன். நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என்பது என் இலக்கில்லை. நடிக்கும் படங்கள் குறைவாக இருந்தாலும், அதில் நிறைவாக நடித்து ரசிகர்களை கவரவேண்டும். இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் என் வண்டி ஓடுகிறது. விமர்சனம் எழுவதுபோல் நான் நடந்துகொள்ளாததே காரணம், என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
