காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி (நேற்று முன்தினம்) ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. விலை குறைந்து இருக்கிறதே என நினைத்த மாத்திரத்தில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. தொடர்ந்து இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880-ம், கிராமுக்கு ரூ.110-ம் அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.86,720-க்கும், ஒரு கிராம் ரூ.10,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம் - ஆதவ் அர்ஜுனா
ஜல்லிக்கட்டு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது - நடிகர் சூரி
திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து
சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
