பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு... பெங்களூருவில் விநோதம்
பெங்களூரு,கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் தனது 2-வது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அந்த குழந்தையின் வயிற்றை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தனர். இதுகுறித்து கிம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி ஈஸ்வர் ஹசாபி கூறுகையில், பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரியவந்துள்ளது. முதுகெலும்புடன் கூடிய கரு இருக்கிறது. தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துள்ளோம். அதன் அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இது ஒரு அரிய நிகழ்வு என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
