இந்தியா-சீனா இடையே 26-ந் தேதி முதல் நேரடி விமான சேவை தொடக்கம்
புதுடெல்லி,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த சேவைகளை இந்திய மற்றும் சீன விமான நிறுவனங்கள் நேரடியாக வழங்கி வந்தன. மேலும், இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு வருகிற 26-ந்தேதி முதல் விமான சேவைகளை தினந்தோறும் வழங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, இண்டிகோ நிறுவனம் டெல்லி-குவாங்சோ இடையே நேரடி விமான போக்குவரத்துகளை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறுகையில், “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தினசரி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் 2 இடங்களில் இருந்து சீனாவுடன் நேரடி இணைப்பை மீண்டும் தொடங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த மிக முக்கியமான நடவடிக்கையின் மூலம், சீனாவிற்குள் மேலும் நேரடி விமானங்களை அறிமுகப்படுத்த நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்று கூறினார். “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே தொடர்ச்சியான தொழில்நுட்ப அளவிலான ஈடுபாட்டை தொடர்ந்து இது வழங்கும்” என்று மத்திய அமைச்சகம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
