‘பா.ஜ.க. ஒரு அமீபா போன்றது; சமூகத்தில் நுழைந்து அமைதியை சீர்குலைக்கிறது’ - உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்
மும்பை, லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜோக்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று உத்தவ் சிவசேனா கட்சி தசரா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “நாட்டில் தற்போது உரிமைகள் மற்றும் நீதிக்காக போராடுவது தேசவிரோத செயலாக மாறிவிட்டது. இந்திய ராணுவத்திற்காக சூரிய சக்தி கூடாரங்களை அமைத்ததற்காகவும், தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்ததற்காகவும் சோனம் வாங்சுக்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வரை புகழ்ந்துகொண்டு இருந்தார். ஆனால் அவர் லடாக்கின் உரிமைகளுக்காக போராட்டத்தை தொடங்கிய தருணத்தில், அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரசின் எண்ணமும், கொள்கையும் தனக்கு எதிராக போராடுபவர்கள் சிறைக்கு செல்லவேண்டும் என்பதுதான். மராட்டியத்திலும் சிறப்பு பொதுபாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கூடாது. உத்தவ் சிவசேனாவின் இந்துத்துவ கொள்கை குறித்து பா.ஜ.க. கேள்வி எழுப்ப வேண்டாம். இல்லையெனில் அதன் தலைவர்களை புகைப்படத்துடன் அம்பலப்படுத்துவேன். பா.ஜ.க. முதலில் அதன் கொடியில் இருந்து பச்சை நிறத்தை அகற்ற வேண்டும். பின்னர் சிவசேனாவின் இந்துத்துவத்தை பற்றி பேசவேண்டும். பா.ஜ.க. ஒரு அமீபாவை போன்றது. அமீபா அதன் விருப்பத்தின்படி உருவத்தை மாற்றி பரவுகிறது. அதன் விருப்பப்படி கூட்டணியை உருவாக்குகிறது. அதன் வேலை முடிந்ததும் அது மற்றொரு கட்சிக்கு மாறுகிறது. அமீபா உடலுக்குள் நுழையும்போது வயிற்று வலியை ஏற்படுத்தும், அதேபோல பா.ஜ.க. அது சமூகத்தில் நுழையும்போது அமைதியை சீர்குலைக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
