கொழும்பில் இளம் தொழிலதிபர் எடுத்த வேண்டாத முடிவு: ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு - லங்காசிறி நியூஸ்
கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம் தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செவ்வாய்க்கிழமை City of Dreams என்ற ஹோட்டலில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கண்டியை சேர்ந்த தொழிலதிபரான அவர், City of Dreams என்ற ஹோட்டலில் 4 நாட்கள் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறையின் கதவு மூடப்பட்டு இருப்பதை குறித்து சந்தேகமடைந்த நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அறையின் கதவை திறந்து பார்த்த போது இளம் தொழிலதிபர் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், எதற்காக அவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இளம் தொழிலதிபர் கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகை பணத்தை இழந்த நிலையில் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
