பாகிஸ்தானில் 3-வது காலாண்டில் 46 சதவீதம் வன்முறை அதிகரிப்பு
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த செவ்வாய் கிழமை குவெட்டா அருகே நடந்த தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் இந்த ஆண்டின் 3-வது காலாண்டில் ஒட்டுமொத்தத்தில் வன்முறை சம்பவங்கள் 46 சதவீதம் அதிகரித்து உள்ளன. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை தடுக்கும் எதிர் தாக்குதல்கள் உள்பட மொத்தம் 329 வன்முறை சம்பவங்கள் நடந்து அவற்றில் 901 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 599 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த உயிரிழப்புகளில் 516 பேர் (57 சதவீதம்) குற்றவாளிகள், மற்ற 385 பேரில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அடக்கம். 2024-ம் ஆண்டில் வன்முறை சம்பவங்களில் மொத்தம் 2,414 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 2,546 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. வன்முறை சம்பவங்களில் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்த வன்முறையில் 96 சதவீதத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் இந்த இரு மாகாணங்களிலும் பதிவாகி உள்ளன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
