ஹாலிவுட் நடிகரின் பெயரில் காதல் வலை - ஆன்லைன் மோசடியில் ரூ.6 கோடியை இழந்த மூதாட்டி
லண்டன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு ஆன்லைன் மூலம் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த நபர் தன்னை அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா என்று கூறியிருக்கிறார். மேலும், தனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப்படுவதாகவும், ஹவாய் தீவில் ஒரு வீடு கட்டி நாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்றும் அந்த நபர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார் மேலும், தன்னிடம் இருந்த பணம் எல்லாம் திரைப்பட தயாரிப்பு பணிகளில் முடங்கியிருப்பதாக அந்த நபர் கூறியதை மூதாட்டி உண்மை என நம்பியுள்ளார். மேலும் அந்த நபர் கேட்கும்போதெல்லாம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். தான் வசித்து வந்த வீட்டை கூட விற்று சுமார் ரூ.6 கோடியை அந்த மூதாட்டி அனுப்பி உள்ளார். ஆனால், கடைசியில் இது ஒரு மோசடி வலை என்பதை உணர்ந்த மூதாட்டி, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கேம்பிரிட்ஜ்ஷயர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
