பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் பலி
மணிலா, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது. தொடர்ந்து 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகின.அப்போது அங்குள்ள போகோ, செபு ஆகிய நகரங்களில் கடும் அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகள், அலுவலகம் என பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு விரைந்த மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக அங்கு ஏராளமான தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து மலைப்பகுதி கிராமங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் புதையுண்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட போகோ நகருக்கு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் சென்றார். அப்போது பலியானோருக்கு இரங்கலை தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
