போர் நிறுத்த முயற்சிக்கு சிக்கல்..? காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலி
காசா, சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சமரச திட்டத்தை உருவாக்கி உள்ளார். அதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹமாஸ் இயக்கத்தினரும் தங்களது பதிலை தெரிவிக்க பரிசீலித்து வருகிறார்கள். இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமரச திட்டம் அறிவித்த அன்றும் காசாவில் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். அதேபோல நேற்றும் பல இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது. அதில் 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தெற்கு காசாவில், உதவி தொகுப்பு வாகனத்தை இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் உதவிக்காக காத்திருந்த பலர் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல மத்திய நகரான டெய்ர்-அல்-பலாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். காசா நகரில் ஒருவரின் இறந்த உடலும், பலர் காயம் அடைந்த நிலையிலும் மீட்கப்பட்டு உள்ளதாக சுகாதார நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல், சமரச முயற்சியை கடினமாக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக காசா நகரில் எஞ்சியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக வெளியேற உத்தரவிடுவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேலின் தாக்குதலின் "முழுப் படையையும்" எதிர்கொள்ள அல்லது தப்பிச் செல்ல இது அவர்களின் "கடைசி வாய்ப்பு" என்று கூறியதால், காசா முழுவதும் அதிகாலை முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
