மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
கொழும்பு, மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் சிறப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணியில் பந்துவீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருப்யா ஹைதர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் வங்காளதேச அணி 31.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
