காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.. தற்போதைய நிலவரம்?
சென்னை,தங்கம் விலை தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது. அதன் பின்னர் சற்று குறைந்த தங்கம் விலை 27-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து தினமும் புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.240-ம், மாலையில் ரூ.480-ம் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.87,600-க்கும், ஒரு கிராம் ரூ.10,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று காலை நிலவரம் தொடர்ந்து விலை அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று காலை சரிவை சந்தித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.163-க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.இன்று மாலை நிலவரம் இந்த நிலையில், காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிகரித்தது. அதன்படி, தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,950-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்; 02.10.2025 ஒரு சவரன் ரூ.87,600 (இன்று மாலை) 02.10.2025 ஒரு சவரன் ரூ.87,040 (இன்று காலை) 01.10.2025 ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று) 30.09.2025 ஒரு சவரன் ரூ.86,880 29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160 27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்: இன்று மாலைக்குள் விசாரணையை முடிக்க திட்டம்?
கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய்
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
நாளை ம.நீ.ம. செயற்குழு கூட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு
திருப்பூர் வழியாக இன்று முதல் அம்ரித் பாரத் ரெயில் சேவை
மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 2 பவுன் செயின் பறிப்பு
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் 3 பேர் கைது
